Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மட்டன் குழம்பில் வயாகரா கலந்து கொடுத்த முயற்சி தோல்வி தூக்கில் தொங்கவிட்டு கணவரை கொன்ற மனைவி

திருமலை: மட்டன் குழம்பில் வயாகரா கலந்து கொடுத்து கொல்ல முயன்றபோது தப்பிய கணவனை அவரது மனைவி தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துள்ளார். ஆனால் அவர் உடலுறவின்போது இறந்துவிட்டதாக நாடகமாடியபோது, கள்ளக்காதலன் உள்பட 6 பேருடன் கைது செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் சத்பகிரி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(35), டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் மவுனிகா(30). இருவரும் காதலித்து கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மவுனிகா பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அஜய் என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதற்கிடையே சுரேஷ் பணத்திற்காக மவுனிகாவை அடிக்கடி துன்புறுத்தி வந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த மவுனிகா, கணவரை கொல்ல முடிவு செய்துள்ளார். இதை தனது உறவினரும், பாலியல் தொழிலாளியுமான ஜாவிடம் தெரிவித்துள்ளார். அதன்படி ஜா, பாலியல் தொழிலாளியான சந்தியா என்பவர் மூலம் மெடிக்கல் ஏஜென்சி உரிமையாளர் சிவகிருஷ்ணா என்பவரை, மவுனிகாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதையடுத்து அனைவரும் சேர்ந்து சுரேஷை கொல்ல திட்டம் தீட்டினர். அதன்படி சந்தியா, தேவதாஸ் என்பவர் மூலம் 15 வயாகரா மாத்திரைகளை வாங்கி வந்து மவுனிகாவிடம் கொடுத்துள்ளார். இதை அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மட்டன் குழம்பு சமைத்து அதில் கலந்து சுரேசுக்கு கொடுத்துள்ளார். ஆனால் வழக்கத்திற்கு மாறாக வாசனை இருந்ததால் சுரேஷ் சாப்பிடவில்லையாம். இந்த முயற்சி தோல்வி அடைந்ததால் கடந்த மாதம் 17ம்தேதி இரவு சிவகிருஷ்ணா கொடுத்த யோசனையின்படி மவுனிகா பிபி மற்றும் தூக்க மாத்திரைகளை அதிகளவு தூள் செய்து மதுவில் கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்த சுரேஷ் சிறிதுநேரத்தில் மயங்கியுள்ளார். உடனே மவுனிகா புடவையால் சுரேஷை தூக்குமாட்டி தொங்கவிட்டு கொலை செய்துள்ளார்.

பின்னர் சடலத்தை கீழே இறக்கி வைத்துவிட்டு, சுரேஷின் தாயாருக்கு போன் செய்து, ‘நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோது திடீரென மயங்கி விழுந்துவிட்டார்’ எனக்கூறி அழுதுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சுரேஷின் தாயார் மற்றும் உறவினர் சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து புகாரின்பேரில் கரீம்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மவுனிகா, தனது கள்ளக்காதலன், மருந்துகடை உரிமையாளர் மற்றும் பாலியல் தொழிலாளிகளுடன் சேர்ந்து சுரேஷை கொன்றுவிட்டு, உல்லாசமாக இருந்தபோது மயங்கிவிழுந்து இறந்ததாக கூறி நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து மவுனிகா, கள்ளக்காதலன் அஜய், சிவகிருஷ்ணா, சந்தியா, தேவதாஸ் ஆகிய 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.