Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உழவு செய்தபோது தந்தை கண்முன் டிராக்டரில் சிக்கி மகன் நசுங்கி பலி

வேலூர்: வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த குக்கலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன், விவசாயி. இவரது மகன்கள் பரத்ராஜ்(8), விமல்ராஜ். இவரது விவசாய நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த ஆதிகேசவன் டிராக்டரால் நேற்று உழவு செய்துகொண்டிருந்தார். அப்போது, பரத்ராஜ், விமல்ராஜ் ஆகிய இருவரும் டிராக்டரில் அமர அடம்பிடித்துள்ளனர். இதனால் தாமோதரன் இருவரையும் டிராக்டர் மீது அமர வைத்துள்ளார். திடீரென பரத்ராஜ் தவறி விழுந்து ரோடவேட்டரில் சிக்கி உடல் நசுங்கி பலியானான். இதை பார்த்து தந்தை தாமோதரன் கதறி அழுதார். இதுகுறித்து லத்தேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.