நான் இப்போது எந்த பொறுப்பில் இருக்கிறேன், விலகுவதற்கு..? ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர்
பாட்னா: பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை வெற்றிபெற்றது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பிகார் சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தால் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன் என ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த பிரசாந்த் கிஷோர்:
நிதிஷ் குமாரின் கட்சி 25 சீட்களுக்கு அதிகமாக வென்றால், நான் அரசியலில் இருந்து விலகுகிறேன் எனக் கூறியிருந்தேன். நான் இப்போது எந்த பொறுப்பில் இருக்கிறேன், விலகுவதற்கு? பீகாரை விட்டு வெளியேறுவேன் என நான் கூறவில்லை. அரசியலில் இருந்து வெளியேறி விட்டேன். அரசியலில் ஈடுபட மாட்டேன். ஆனால், பீகார் மக்களுக்காக பேசுவதையும் நிறுத்த மாட்டேன் என கூறினார்.


