வெல்லிங்டன்: நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணி இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெல்லிங்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 205 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 47 ரன்னும், ஜான் காம்ப்பெல் 44 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து பந்து வீச்சில் பிளேர் டிக்னர் 4, மைக்கேல் ரே 3 விக்கெட் எடுத்தனர். பின்னர், முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 24 ரன் எடுத்து இருந்தது.
நேற்று 2வது நாள் ஆட்டம் நடந்தது. இதில் 9 விக்கெட் இழப்புக்கு 278 ரன் எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து அணி டிக்கேள் செய்தது. அதிகபட்சமாக கான்வே 67 ரன்னும், மிட்சேல் ஹாய் 61 ரன்னும் எடுத்திருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஆண்டர்சன் பிலிப் 3, கெமர் ரோச் 2 விக்கெட் எடுத்தனர். 73 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை வெஸ்ட் இண்டீஸ் அணி தொடங்கியது. தொடக்க வீரர் சேம்பல் 14 ரன்னிலும், நைட் வாட்ச்மேனாக வந்த ஆண்டர்சன் பிலிப் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெண்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட்டுக்கு 32 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.


