கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் பர்தாமன் மாவட்டத்தில் உள்ள துர்காபூரில் தனியார் மருத்துவக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவி(ஒடிசாவைச் சேர்ந்தவர்) கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் மூன்று குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
இரவு முழுவதும் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கை மற்றும் மொபைல் நெட்வொர்க் கண்காணிப்பு மூலம் இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கூடுதலாக, பாதிக்கப்பட்டவருடன் இருந்த சில மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் மற்றும் நண்பர்களை போலீசார் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
மேலும் சந்தேகமுள்ள நபர்களை சிலரை போலீசார் தேடி வருகின்றனர். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று போலீசார் உறுதியளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அவரது குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன எனவும் இந்த வழக்கு தொடர்பாக சரிபார்க்கப்படாத எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும் போலீசார் தரப்பில் கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.