கொல்கத்தா: மேற்கு வங்கம், கொல்கத்தாவில் எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனை உள்ளது. இதில் வார்டு பாயாக பணியாற்றியவர் அமித் மாலிக். நேற்றுமுன்தினம் மருத்துவமனையில் டாக்டரை பார்ப்பதற்காக 15 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார். டாக்டரின் அறைக்கு நின்றிருந்த சிறுமியை அமித் மாலிக் மானபங்கம் செய்துள்ளார். இது குறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் நேற்று முன்தினம் இரவு தாப்பா பஸ்தி சாலையில் நின்றிருந்த அமித் மாலிக்கை போலீசார் கைது செய்தனர்.
+
Advertisement
