கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மணல் கடத்தல் தொடர்பாக தொழிலதிபர் வீடு உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேற்கு வங்கத்தில் சட்ட விரோத மணல் கடத்தல் தொடர்பான புகார்கள் வந்தன. இதையடுத்து, அமலாக்க துறை அதிகாரிகள் கொல்கத்தா பென்டிக் தெரு,லால்கர்,ஜார்கிராம் மாவட்டத்தில் உள்ள கோபிபல்லவ்பூர் ஆகிய இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.பச்சிம் பர்தமான் மாவட்டம், அசன்சோலில் உள்ள தொழிலதிபரின் வீட்டிலும் சோதனைகள் நடந்தன. அசன்சோலில் மணல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஒருவரின் வீட்டிலும் சோதனைகள் நடந்தன. இதுகுறித்து அமலாக்க அதிகாரி கூறுகையில்,‘‘சட்ட விரோத மணல் கடத்தும் தொழிலில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் தொழிலதிபரின் வீடு உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதலே சோதனைகள் நடந்து வருகின்றன. பல்வேறு இடங்களில் மணல் குவாரி நடத்தி வந்த தொழிலதிபரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர் மீது நிதி முறைகேடுகள், சட்ட விரோத பண மோசடி குற்றச்சாட்டுகள் உள்ளன’’ என்றார்.
+
Advertisement