மேற்கு வங்கத்தில் 26 லட்சம் வாக்காளர்களின் பெயர் 2002 பட்டியலுடன் பொருந்தவில்லை: தேர்தல் ஆணையம் தகவல்
கொல்கத்தா: பீகாரில் தேர்தல் ஆணையத்தால் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது போலவே மேற்கு வங்கத்திலும் வாக்காளா் பட்டியலில் இருந்து பெருமளவில் பெயா்களை நீக்க பாஜ திட்டமிட்டு வருவதாகமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தாா். இந்நிலையில், தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், மேற்கு வங்கத்தில் நேற்றுமுன்தினம் 6 கோடிக்கும் மேற்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் எஸ்ஐஆர் முறையில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
இந்த படிவங்கள் மேப்பிங் நடைமுறையின் கீழ் கொண்டு வரப்பட்டு அவை முந்தைய எஸ்ஐஆர் பதிவுகளுடன் பொருந்துகின்றனவா என சோதிக்கப்படும்.மேற்கு வங்கத்தில் சுமார் 26 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் 2002 பட்டியல் தரவுகளுடன் பொருந்தவில்லை.டிஜிட்டல் மயமாக்கல் தொடரும் போது இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று தெரிவித்தன.

