திருவெறும்பூர்: திருச்சி அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இன்னும் ஒரு வாரத்திற்குள் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும். கட்சியில் சீனியர்கள் இருக்கும் போது உதயநிதிக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். இது எங்கள் கட்சி. இதைப்பற்றி அவர் கேட்க கூடாது. ஒட்டுமொத்தமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இளம் தலைவராக உதயநிதி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி எதையாவது பேச வேண்டும் என்பதற்காகவே பேசி வருகிறார். தேர்தல் பயத்தை திமுகவுக்கு கொண்டு வர வேண்டும் என முயற்சி செய்கிறார். ஆனால் அது எந்த இடத்திலும் எடுபடவில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்து வருகிறார். ஆனால் அவர்கள் அடுத்த நிமிடமே மறுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.