அண்ணாவின் 117வது பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!
சென்னை: அண்ணாவின் 117வது பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அண்ணா படத்திற்கு துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செய்தனர். தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்க்கப்பட்டது. உறுதிமொழியில், நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக போராடுவேன். வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் வாக்குரிமையை பறிக்கும் SIRக்கு எதிராக நிற்பேன். நீட்டை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன்; உரிய கல்வி நிதிக்காக போராடுவேன். தமிழ் மொழி, பண்பாடு, பெருமைக்கு எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்து போராடுவேன் என திமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.