கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்: தென்காசியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
தென்காசி: லத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுமதி முத்துக்குமாருக்கு கலைஞர் கனவு இல்லத்துக்கான சாவியை வழங்கியுள்ளோம் என தென்காசியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். குடிசை இல்லா தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று ஏராளமான திட்டங்களை கொண்டுவந்தவர் கலைஞர். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு லட்சம் குடும்பங்களுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது.
