Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது எந்த மாதிரியான தாக்குதலையும் அனுமதிக்க மாட்டோம்: ராகுல்காந்தி உறுதி

டெல்லி: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது எந்த மாதிரியான தாக்குதலையும் அனுமதிக்க மாட்டோம் என ராகுல்காந்தி உறுதி மொழி அளித்துள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் மட்டுமல்ல; நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அளிக்கப்பட்ட வாக்குறுதி. ஒருவர் எந்த மதம், மொழி, மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சமத்துவம், மரியாதை, நீதி தரப்பட வேண்டும். ஏழை, விளிம்புநிலை மக்களுக்கு அரசியலமைப்பு பாதுகாப்பு கவசமாகும்; அதுதான் அவர்களின் பலம். அரசியலமைப்பு சட்டம் எவ்வளவு காலம் பாதுகாப்பாக உள்ளதோ அதுவரை ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.