திருவனந்தபுரம்: வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 170 பேர் உயிரிழந்துள்ள நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். திருவனந்தபுரத்தில் இன்று நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் மூத்த அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். பலி எண்ணிக்கை உயரலாம் என்ற அச்சத்தை அடுத்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலையில் திடீரென அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. 2-வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனஇந்த நிலச்சரிவில் சிக்கி 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் மீட்க்கப்பட்டுள்ளதாக ராணுவதம் தெரிவித்துள்ளது. மீட்க்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய பிறகு அனைத்து கட்சி கூட்டத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.