நீர்வளத்துறையில் இளநிலை வரைதொழில் அலுவலர் (சிவில்) பதவிக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் துரைமுருகன்
சென்னை: நீர்வளத்துறையில் 2024-2025 ஆண்டில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான (பட்டயம்), தேர்வின் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை வரைதொழில் அலுவலர் (சிவில்) பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு, நீர்வளத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 77 தெரிவாளர்களுக்கு மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (15.10.2025) பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறையின் செயலாளர் ஜெ. ஜெயகாந்தன், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது), சு. கோபாலகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.