சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழையினால் தற்போது நீர்நிலைகளில் உள்ள நீர் இருப்பு நிலவரங்கள், எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு விவரங்கள் குறித்து அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று ஆலோசனை நடத்தினார். நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் கொள்ளளவிலிருந்து 20% வரை தண்ணீரை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை அனைத்து மண்டல பொறியாளர்களுக்கும் அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு செயலாளர் ஜெயகாந்தன், முதன்மை தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) கோபாலகிருஷ்ணன் மற்றும் சென்னை மண்டல பொறியாளர்கள், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மண்டல பொறியாளர்கள் காணொலி காட்சி வாயிலாகவும் கலந்து கொண்டனர்.
+
Advertisement



