கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த கலையநல்லூர் சாலையில் சாஜன் என்பவரின் வாட்டர் சர்வீஸ் கடையில் தென் கீரனூர் கிராமத்தை சேர்ந்த அரவிந்த் (27), ஷாகில் (17) ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் நான்கு சக்கர வாகனத்துக்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அரவிந்த் மீது மின்சாரம் பாய்ந்து அலறினார். அவரை காப்பாற்றுவதற்காக அருகில் சென்ற ஷாகில் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

