அக்டோபர் மாதத்துக்கு வழங்க வேண்டிய 20 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும்: கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு
சென்னை: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 44வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே ஹல்தர் தலைமையில் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டின் நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், இரா.சுப்பிரமணியம், தலைவர், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அக்டோபர் மாதத்திற்கு வழங்க வேண்டிய 20.22 டிஎம்சி நீரினை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்பதாக தெரிவித்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர், தமிழ்நாட்டிற்கு அக்டோபர் மாதத்திற்கு வழங்க வேண்டிய 20.22 டிஎம்சி நீரினை திறந்து விடுமாறு கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டார்.