திருமங்கலம்: மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே திருமால் புதுப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இன்டர்நெட் சென்டர் நடத்தி வருகிறார். இவரது மனைவி சித்ரா (30), திருச்சி மாவட்டம், மணப்பாறை நீதிமன்ற அலுவலக உதவியாளர். சித்ராவுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவ விடுப்பில் பெற்றோர் வீடான அலங்காநல்லூரில் இருந்த சித்ரா, கடந்த 24ம் தேதி கணவர் வீட்டிற்கு குழந்தையுடன் வந்தார்.
நேற்று முன்தினம் காலை தொட்டிலில் குழந்தையும், அருகில் சித்ராவும் தூங்கியுள்ளனர். வெளியில் சென்றிருந்த மாமியார் திரும்பி வந்தபோது குழந்தையை காணவில்லை. வீடு முழுவதும் தேடியபோது அண்டாவில் இருந்து தண்ணீரில் குழந்தை மூழ்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர்.

