புதுடெல்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்(ஐசிஎம்ஆர்) இயக்குனர் ஜெனரல் ராஜிவ் பெஹல் கூறியதாவது: தொற்று நோய்களின் ஆரம்ப கால எச்சரிக்கை அமைப்பை நிறுவ உதவும் முயற்சிகளின் ஆரம்ப கட்ட முயற்சியாக தற்போது 5 நகரங்களில் கழிவு நீரில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டாடா மரபியல் மற்றும் சமூக நிறுவனம், தேசிய உயிரியல் அறிவியல் மையம், செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணி, இந்தியாவின் ஐந்து நகரங்களில் கோவிட்-2 ன் திடீர் பரவல் குறித்த தரவுகளை தருகிறது.
நாட்டின் பல நகரங்களில் மனித மற்றும் விலங்குகளின் நோய்க்கிருமிகளைச் சேர்க்க இப்போது திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஒரு வலுவான கண்காணிப்பு அமைப்பை உருவாக்கும். ஏதேனும் தொற்று ஏற்பட்டால் பதிலளிக்கும் பொறிமுறையை வலுப்படுத்தும். இதனை விரிவுபடுத்தும் நடவடிக்கையாக அடுத்த ஆண்டில், நாடு முழுவதும் 50 நகரங்களில் கழிவு நீர் ஆய்வு தீவிரப்படுத்தப்படும் என்றார்.