சென்னை: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: மாநில குற்ற ஆவண காப்பகம் மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமம் காவல் துறையினரால் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 25 வாகனங்கள் (14 நான்கு சக்கர வாகங்கள் மற்றும் 11 இரு சக்கர வாகனங்கள்) வரும் 29ம் தேதி காலை 12 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது.
ஏலம் எடுக்க விரும்புவோர் வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி மாலை 5 மணி வரை ரூ.1000 முன்பணமாக செலுத்தி பதிவு செய்துக்கொண்டு, ஏலத்தில் பங்கு பெறுவதற்கான டோக்கனை காவல்துறை அலுவலக மோட்டார் வானப்பிரிவில் பெற்றுக்கொள்ள வேண்டும்.