பிரிஸ்பேன்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்ற பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரமின் சாதனையை ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் முறியடித்துள்ளார். அதாவது 414 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த வாசிம் அக்ரமின் சாதனையை முறியடித்து, டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்ற புதிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார். 418 விக்கெட் எடுத்துள்ள மிட்செல் ஸ்டார்க் கூறுகையில், ``என்னை விட வாசிம் அக்ரம் எவ்வளவோ சிறந்த பந்துவீச்சாளர்.
என்னைப் பொறுத்தவரை, இடதுகை பந்துவீச்சாளர்களின் சிகரம் அவர்தான். கிரிக்கெட் விளையாடிய மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் அவரும் ஒருவர். அவருடைய பெயருடன் என் பெயரும் பேசப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அவருடன் என்னை ஒப்பிட முடியாது. நான் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிக்கிறேன், அவ்வளவுதான்’’ என்றார்.

