அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் சிறப்பு பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அடையாறு ஆற்றின் முக துவாரத்தில் உள்ள மண் படுகைகளை வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்பு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி நீர்வளத்துறையினரால் செப்டம்பர் 2025 முதல் அக்டோபர் மாதம் வரை தூர்வாரி அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
முகதுவாரம் மண் படுகையினால் மூடப்படும் நிகழ்வானது கடல் அலைகளினால் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வாகும். இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தீவிரமானதால் முதலமைச்சர் 24.10.2025 அன்று அடையாறு முக துவாரத்திற்கு திடீராய்வு மேற்கொண்டு நீர்வளத்துறையினரால் 3 பொக்லைன் கொண்டு தூர்வாரப்படும் அடையாறு ஆற்றின் முகதுவாரத்தை அகலப்படுத்தும் பணியினை கூடுதல் இயந்திரங்களை பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் மண் திட்டுக்களை அகற்றி அடையாறு வெள்ளநீர் விரைவாக வடிய ஆணையிட்டார்.
இதனைத் தொடர்ந்து 24.10.2025 அன்று மாலையில் இருந்து படிப்படியாக இயந்திரங்கள் எண்ணிக்கையினை உயர்த்தப்பட்டு தற்போது 12 பொக்லைன் இயந்திரங்களும் 4 ஜேசிபி (JCB) இயந்திரங்களுண்டு போர்க்கால அடிப்படையில் நீர்வளத்துறையினரால் அடையாறு ஆற்றின் முக துவாரத்தின் மண் திட்டுகளை அகற்றி அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளின் முன்னேற்றத்தினை நீர்வளத்துறை அரசு செயலர் ஜெயகாந்தன், முதன்மை தலைமைப்பொறியாளர் பொறி.கோபாலகிருஷ்ணன் , தலைமைப்பொறியாளர் பொறிசி.பொதுபணி திலகம், கண்காணிப்பு பொறியாளர் பொறி.க.செல்வகுமாரால் பார்வையிட்டு,
இப்பணிகளின் முன்னேற்றத்தினை தொடர்ந்து கண்காணிக்க கண்காணிப்பு பொறியாளர் பொறி.க.செல்வகுமார் தலைமையில் சிறப்பு குழு அமைத்து செயற்பொறியாளர் பொறி.கோ.ரா.ராதாகிருஷ்ணா, உதவி செயற்பொறியாளர் பொறி.மகேந்திரகுமார், மற்றும் உதவி பொறியாளர் பொறி.ஆர்.சதீஷ்குமாருடன் கிருஷ்ணா குடிநீர் சிறப்பு திட்ட கோட்டத்தில் இருந்து கூடுதலாக மூன்று களப்பொறியாளர்களை நியமித்து பணிகளை விரைந்து முடிக்க ஆவணம் செய்யப்படுகிறது.
