சேலம்: மேட்டூர் அணை நடப்பாண்டில் 6-வது முறையாக 120 அடியை எட்ட உள்ள நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருவாய் துறை சார்பாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்கமாபுரி பட்டினம், புதுபாலம் உள்ளிட்ட பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. குளிப்பது, துணி துவைப்பது, செல்பி எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
+
Advertisement