சென்னை: வக்பு நிறுவனங்களின் விபரங்களை பதிவேற்ற செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வக்பு வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வக்பு நிறுவனங்களின் முத்தவல்லிகள்/ நிர்வாக குழுவினர்கள் தங்களது வக்பு நிறுவனங்களின் விபரங்களை “THE UNIFIED WAQF MANAGEMENT EMPOWERMENT, EFFICIENCY, AND DEVELOPMENT ACT, 1995-ன்படி “UMEED CENTRAL PORTAL, 2025” https://umeed.minorityaffairs.gov.in-ல் 04.12.2025க்குள் முத்தவல்லி பதிவு மற்றும் நில விபரங்களை தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement

