டெல்லி: வக்ஃபு சட்டத் திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே இடைக்கால உத்தரவு பிறப்பித்த நிலையில் உச்சநீதிமன்றம் திங்கட்கிழமை தீர்ப்பளிக்கிறது. வக்ஃபு திருத்த சட்டப்படி உறுப்பினர் நியமனம் செய்யக் கூடாது என்றும், ஏற்கனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. வக்ஃபு சட்டத்திருத்தத்துக்கு எதிராக திமுக, விசிக, இந்திய கம்யூ. உட்பட 72 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement