சென்னை: தொழில்நுட்பக் கல்வியில் ஆர்வமுள்ளவர்கள், ஐஐடி கல்வி எப்படி இருக்கும் என பார்க்க விரும்புகிறவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைவரும் நவீன தொழில்நுட்பங்களின் உருவாக்கத்தை அறிந்துகொள்ளும் வகையில் சென்னை ஐஐடி ஓபன் ஹவுஸ் 2026-ஐ ஜனவரி 2 முதல் 4ம் தேதி வரை நடத்த உள்ளது. அனைவருக்கும் ஐஐடி என்ற முன்னெடுப்பில் ஓபன் ஹவுஸ் நிகழ்வில் ஆய்விற்கான வசதிகளையும், கட்டமைப்புகளை பொது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்படும். 80 கண்காட்சி அரங்குகள், 18 கல்வி துறைகளை உள்ளடக்கிய 4 தேசிய ஆராய்ச்சி மையங்கள், 15 உயர் சிறப்பு மையங்கள் ஆகியவை இடம்பெற உள்ளன.
கடந்த ஆண்டு நடந்த நிகழ்வில் சுமார் 35 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். தொடர்ந்து, இந்தாண்டு 3 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் 60 ஆயிரம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் https://www.shaastra.org/open-house என்ற இணையதளம் மூலம் டிசம்பர் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை ஐஐடி ெதரிவித்துள்ளது.



