Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூலித் தொழிலாளி, இளைஞர் வாங்கி கணக்கிலும் 37 இலக்க தொகை வரவு: இரு சம்பவங்களும் கோட்டக் மஹிந்திரா கணக்கில் நிகழ்ந்துள்ளது

பாட்னா: வங்கி கணக்கில் கோடி கணக்கான ரூபாய் பணம் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட செய்தியை அவ்வப்போது கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் கணக்கிட முடியாத அளவு இலக்கங்களை கொண்ட தொகை வரவு வைக்கப்பட்ட அதிசய நிகழ்வு இரு வேறு இடங்களில் நிகழ்ந்துள்ளது. கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்தவர் 20 வயது தீபக். கடந்த 3ம் தேதி இரவு அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் கணக்கிட முடியாத அளவில் பல இலக்கங்கள் கொண்ட தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு காலமான அவரது தாயின் கணக்கை அவர் கையாண்டு வரும் நிலையில், அதில் தான் இந்த 37 இலக்கங்கள் கொண்ட தொகை வரவு வைக்கப்பட்டது. அசத்திய அளவில் பணம் வரவு வைக்கப்பட்ட செய்தி நகர முழுவதும் தீ போல் பரவியதில் தீபக் திடீர் பணக்காரராக ஆனாரோ இல்லையோ திடீர் பிரபலம் ஆனார்.

இதேபோல பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் வங்கி கணக்கிலும் 37 இலக்க தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூரில் கூலி வேலை செய்து வரும் திணிமஞ்சில் என்பவர் செல்போன் வங்கி ஆப் பார்த்துள்ளார். ரூ.500 மட்டுமே பணம் இருந்த கணக்கில் 37 இலக்கங்கள் தொகை இருப்பதை பார்த்தபோது என்னவென்று புரியாமல் விழித்துள்ளார். இரு சம்பவங்களும் கோட்டக் மஹிந்திரா வங்கி கணக்கிலேயே நிகழ்ந்துள்ள நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் என்றும் உண்மையில் அவளோ பணம் வரவு வைக்கப்படவில்லை என்று வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இரு சம்பவங்களிலும் வருமானம் வரித்துறை விசாரணை தொடங்கியுள்ளது.