வாக்குரிமையை பறிப்பதற்கு துணைபோகும் சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர்: அமைச்சர் ரகுபதி விமர்சனம்
வாக்குரிமையை பறிப்பதற்கு துணைபோகும் சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர் என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஆதரித்து வழக்கு தொடர்ந்த ஒரே கட்சி அதிமுக. அவசர அவசரமாக எஸ்.ஐ.ஆர். பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்வதில் உள்நோக்கம் உள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதில் திமுகவுக்கு மாற்று கருத்து இல்லை. தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
