Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் 41 தொகுதிகளை குறி வைக்கும் பாஜ: வடமாநிலத்தவரை அதிகளவில் சேர்க்க திட்டம்?

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் 41 தொகுதிகளை குறி வைத்து பாஜ காய் நகர்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த தொகுதிகளில் வடமாநிலத்தவரை அதிக அளவில் வாக்காளர் பட்டியலில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கொண்டு வருவது வாக்காளர்களை நீக்கும் தந்திரம்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் காலகட்டத்தில் பண்டிகைகள் வருவதால் வாக்காளர் பட்டியலில் சேர விரும்பும் வாக்காளர்களின் பெயர் விடுபட நேரிடும். தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள 2002, 2005 வாக்காளர் பட்டியல்கள் முழுமையற்றதாகவும், குழப்பம் விளைவிப்பதாகவும் அமைந்துள்ளன. எதிர்­கட்­சி­களை முடக்க, தேர்­தல் ஆணை­யமே அந்த வேலை­யில் இறங்கியுள்ளது. தேர்த­லை திருட்­டுத்­த­ன­மாக நடத்த இன்­றைக்கு ஒன்­றிய அரசு இறங்­கி­யுள்­ளது. நாம் அனை­வ­ரும் விழிப்­பாக இருக்க வேண்­டிய கால­கட்­டம் இது.

முத­லில் உங்­கள் ஒவ்வொரு­வர் வாக்­கை­யும் நீங்­கள் பாது­காக்க வேண்­டும். உங்­க­ளைச் சுற்றி இருக்­கிற தகுதியான ஒரு வாக்­க­ாளர்­கூட, பட்­டி­ய­லில் இருந்து நீக்­கப்­பட்டு விடக் கூடாது. இதில் நாம் கண்­ணும், கருத்­து­மாக நாம் ஈடு­பட வேண்­டும். அதே­மா­திரி, போலி வாக்­கா­ளர்கள் சேர்ப்­ப­தை அனுமதிக்கக்கூடாது என்று முதல் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதே நேரத்தில் அண்மையில் தேர்தல் நடந்து முடிந்த பீகாரில் பாஜ வெற்றி பெற்றதே எஸ்ஐஆர் மூலம் வாக்காளர்கள் நீக்கம் தான் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

அதேபோல, தமிழ்நாட்டிலும் குறிவைத்து வாக்காளர்களின் பெயரை நீக்க பாஜ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீக்குவது மட்டுமல்ல, வடமாநிலத்தவர்களை இங்கே சேர்க்கவும் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அப்படி 41 தொகுதிகளை பாஜ குறிவைத்துள்ளது. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்றாலும், இந்த 41 தொகுதிகளில் அதிதீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், தலித்துகள் அதிகமுள்ள 29 தொகுதிகளை தேர்வு செய்து அதில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாக்காளர்களை நீக்கவும், 12 தொகுதிகளில் வட இந்தியர்களை சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக தான் சென்னை எழும்பூர், ராயபுரம், துறைமுகம், அம்பத்தூர், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், பூந்தமல்லி ஆகிய 12 தொகுதிகளில் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகுதிகளை குறிவைத்து புதிய வாக்காளர்களாக அவர்களை இணைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

கிறிஸ்துவர்கள் அதிக அளவில் வாக்காளர்களாக இருக்கும் நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், பத்மநாபபுரம், உதகமண்டலம், கூடலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய தொகுதிகளிலும், இஸ்லாமியர்கள் அதிக அளவில் வாக்காளர்களாக இருக்கும் ராமநாதபுரம், ஆலங்குடி, பட்டுக்கோட்டை, வாணியம்பாடி, நாகப்பட்டினம், ஸ்ரீவைகுண்டம், அரவக்குறிச்சி, குன்னம் ஆகிய தொகுதிகளிலும், பட்டியல் இனத்தவர் அதிக வாக்காளர்களாக இருக்கும் பரமக்குடி, மதுராந்தகம், செய்யூர், விருத்தாசலம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், திருவாரூர், கீழ்வேளூர், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளிலும் சிறப்பு தீவிரத் திருத்தத்தை அதிதீவிரமாக செயல்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வந்திருக்கும் வாக்காளர்களை இணைத்தும், தமிழ்நாட்டிலிருக்கும் இஸ்லாமிய, கிறித்துவ, பட்டியலின வாக்காளர்களை நீக்கியும் குறைந்தது 41 தொகுதிகளையாவது கைப்பற்றவேண்டும் என்று பாஜ நினைக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜ கேட்கும் 60 தொகுதிகளில் இந்த 41 தொகுதிகளும் அடங்குகிறது. இவற்றில் சில தொகுதிகள் அதிமுகவிடம் உள்ளன. அவற்றை இம்முறை பாஜ கேட்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

41 தொகுதிகளைக் குறிவைத்து காய்கள் நகர்த்துவதை அடுத்து இந்த வியூகத்தை உடைக்க திமுக முடிவு செய்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக திமுக 234 தொகுதிகளிலும், 68,000க்கும் மேற்பட்ட தனது பாக முகவர்களை இறக்கி விட்டுள்ளது. ஒரு வாக்காளரை கூட விடாமல், அவர்கள் கணக்கீட்டுப் படிவத்தைக் கொண்டு சேர்க்க பிஎல்ஓக்களுக்கு உதவுகின்றனர். கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பவும் உதவுகின்றனர். பிற கட்சியினரைச் சேர்ந்த நிர்வாகிகள் கூட எஸ்ஐஆர் பணிகளில் திமுகவின் உதவியை நாடுகின்றனர். தமிழ்நாட்டில் எஸ்ஐஆரை பொறுத்தவரை திமுகவை மீறி எதுவும் நடந்துவிடக்கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்கு தலைமை அறிவுறுத்தியுள்ளது.

இதனால், நிர்வாகிகளும் களத்தில் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். 41 தொகுதிகள் என்ன 234 தொகுதிகளையும் குறிவைத்து இறங்கினாலும் அதை தடுக்க திமுக தயாராக இருப்பதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்றாலும், இந்த 41 தொகுதிகளில் அதிதீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், தலித்துகள் அதிகமுள்ள 29 தொகுதிகளை தேர்வு செய்து அதில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாக்காளர்களை நீக்கவும், 12 தொகுதிகளில் வட இந்தியர்களை சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.