வாக்காளர் பட்டியல் சிறப்பு சீராய்வை மக்கள் பக்கம் நின்று எதிர்கொள்வோம்: திமுக எம்பி என்.ஆர்.இளங்கோ அறிவிப்பு
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு சீராய்வை மக்கள் பக்கம் நின்று எதிர்கொள்வோம் என்று திமுக எம்பி என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ தனது சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சீராய்வு குறித்து திமுக சட்டத்துறை பயிற்சி முகாம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான திமுக சட்டத்துறையினருக்கும், திமுக இளைஞர் அணியினருக்கும் மற்றும் தகவல் மற்றும் தொழில்நுட்ப அணியினருக்கும் எஸ்ஐஆர்-ஐ எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு சீராய்வை மக்கள் பக்கம் நின்று எதிர்கொள்வோம்.


