நெல்லை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று (ஞாயிறு) மாலை நெல்லை மாவட்டம், பாளையங்ேகாட்டையில் ஒன்றிய பா.ஜ. அரசு மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து நடத்தும் வாக்கு திருட்டு மோசடியை கண்டித்து பிரமாண்ட மாநாடு நடக்கிறது. இதற்காக நெல்லை-திருச்செந்தூர் ரோட்டில் பாளையங்கோட்டை கோர்ட் எதிரே அமைந்துள்ள பெல் பள்ளி மைதானத்தில் பிரமாண்டமாக மேடை அமைக்கப்பட்டுள்ளது.மாநாட்டிற்கு தமிழ்நாடு காங்கிரஸ கமிட்டி தலைவர் கு. செல்வபெருந்தகை எம்எல்ஏ தலைமை வகிக்கிறார். ராஜேஷ்குமார் எம்எல்ஏ முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு காங்., பொருளாளர் ரூபி மனோகரன் வரவேற்புரையாற்றுகிறார். ராபர்ட் புரூஸ் எம்பி மாநாட்டை துவக்கி வைத்து பேசுகிறார்.
மாநாட்டில் காங்., மூத்த தலைவர் ப. சிதம்பரம் மற்றும் அகில இந்திய காங்., நிர்வாகிககள் கிரிஷ் சோடங்கர், பவன் கேரா, சூரஜ் எம்என் ஹெக்டே, எம்பிக்கள் விஜய் வசந்த், ஜோதிமணி, விஷ்ணு பிரசாத், கார்த்தி சிதம்பரம், கோபிநாத், சசிகாந்த் செந்தில், வக்கீல் சுதா ராமகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் பழனிநாடார், ஊர்வசி அமிர்தராஜ், ஏஎம் முனிரத்தினம், ஜே.ஜி. பிரின்ஸ், தாரகை கத்பர்ட், ராஜகுமார், கணேஷ், ஜேஎம்எச் ஹசன் மவுலானா, துரை சந்திரசேகர், ஆர். ராதாகிருஷ்ணன், எஸ்டி ராமச்சந்திரன், மாங்குடி, ஆர்எம் கருமாணிக்கம், அசோகன் மற்றும் காங்கிரசார் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். நெல்லை மாநகர மாவட்ட காங்., கமிட்டி தலைவர் கே. சங்கரபாண்டியன் நன்றி கூறுகிறார்.