புதுடெல்லி: அசாம் மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த பணியை தொடங்குவதற்கு தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. அசாம் மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை தொடங்குவதற்கு தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 22ம் தேதி முதல் டிசம்பர் 22ம் தேதி வரை வீடு வீடாக சென்று சரிபார்ப்பு பணி தொடங்கும். ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 27ம் தேதியும், இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதியும் வெளியிடப்படும்.
+
Advertisement


