சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நாளையுடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மூலம் இதுவரை 99.55 சதவீத படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மூலம் இதுவரை 6 கோடியே 38 லட்சத்து 25 ஆயிரத்து 624 படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதுவரை படிவம் வழங்காத வாக்காளர்கள் நாளைக்குள் வழங்கவில்லை என்றால் அவர்களது பெயர்கள் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement


