முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி பழனிசாமி இதுவரை வாய் திறக்காதது ஏன்?: அமைச்சர் துரைமுருகன் கேள்வி
சென்னை: எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு வாக்காளர்களையும் டெல்லியிடம் அடமானம் வைக்கத் துணிந்துவிட்டாரா? என அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்; முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி பழனிசாமி இதுவரை வாய் திறக்காதது ஏன்?. போலி வாக்காளர்களை சேர்த்து பாஜகவிற்கு துணை போகும் அதிமுகவிற்கு எதிராக தமிழ்நாடு ஓரணியில் நின்று வெல்லும். வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தமிழ்நாட்டு அரசியல் உரிமையையே அபகரிக்க நினைக்கிறார்கள். நாட்டை தொடர்ந்து ஆள பாஜக எத்தனையோ குறுக்கு வழிகளைக் கையாண்டு வருவதாக துரைமுருகன் குற்றச்சாட்டியுள்ளார்.