வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்ற பெயரில் தீய செயலை, சதி செயலை செய்கிறது தேர்தல் ஆணையம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தருமபுரி: வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்ற பெயரில் தீய செயலை, சதி செயலை செய்கிறது தேர்தல் ஆணையம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்துள்ளார். தமிழ்நாட்டில் உரிய அவகாசம் வழங்காமல் S.I.R. மேற்கொள்வது ஏன் என கேள்வி எழுப்பினார். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் SIR மேற்கொள்வது உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம். பீகாரில் செய்ததை போன்று தமிழ்நாட்டிலும் வாக்காளர்களை நீக்க சதி நடக்கிறது என தெரிவித்தார்.
