சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக திமுக சார்பில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபடும் திமுகவினருக்கு எழும் கேள்வி சந்தேகங்களுக்கு உதவ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் தலைமைக் கழகம் மூலம் ஒருங்கிணைத்திட என்ஆர். இளங்கோ மேற்பார்வையில் உதவி மையம் செயல்படும். திமுக நிர்வாகிகள், 80654 20020 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சந்தேங்களுக்கு பதிலை பெறலாம்.
+
Advertisement 
 
 
 
   