டெல்லி: வாக்கு திருட்டு மூலம் பீகாரிலும் ஆட்சியை பிடிக்க பாஜக முயல்வதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என்பது ஜனநாயகத்தை அழிக்க பாஜகவின் புதிய ஆயுதம் என்று கூறினார். மேலும் ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ஆதாரத்தை ராகுல் வெளியிட்டார். ஹரியானாவில் மொத்த வாக்காளர்கள் 2 கோடி பேர், திருடப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை 25 லட்சம்; ஹரியானாவில் மொத்தம் உள்ள வாக்குகளில் 12.5 சதவீதம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. 8ல் ஒரு வாக்கு ஹரியானா சட்டமன்ற தேர்தலில் கள்ள ஓட்டு. 2க்கு மேல் பதிவான வாக்குகளை அழிக்கும் மென்பொருள் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது, அதை ஏன் பயன்படுத்தவில்லை? தேவையான மென்பொருள் இருந்தும் தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை நீக்கவில்லை - பல ஆயிரம் பக்க ஆவணங்களை வெளியிட்டு தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
+
Advertisement
