Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்கு திருட்டு, பாஜக பதவி விலகு" முழக்கத்தை நாடு முழுவதும் மக்களிடம் தீவிரமாக முன்னெடுத்து செல்வோம்: ராகுல் காந்தி பரப்புரை

ரேபரேலி: வாக்கு திருட்டு, பாஜக பதவி விலகு" முழக்கத்தை நாடு முழுவதும் மக்களிடம் தீவிரமாக முன்னெடுத்து செல்வோம் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடைபெற்றதாக ராகுல் காந்தி சமீபத்தில் புள்ளி விவரங்களை வெளியிட்டார். ஆனால் அவரது குற்றசாட்டு அடிப்படை ஆதாரமற்றது என கூறி தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதனிடையே பீகாரில் வாக்காளர்பட்டியல் முறைகேட்டை கண்டித்தும், நேர்மையான தேர்தலை வலியுறுத்தியும் வாக்காளர் உரிமை யாத்திரை என்ற பெயரில் வாக்கு திருட்டு குற்றசாட்டை முன்வைத்து. சசாரா முதல் பாட்னா வரை ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டார். அப்போது அவருக்கு பல்வேறு கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வாக்கு திருட்டு தொடர்பாக பொதுமக்கள் இடையே பேசிய அவர் வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதனிடையே உத்தர பிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான ரேபரேலி மக்களவை தொகுதிக்கு 2 நாள் பயணமாக ராகுல் காந்தி நேற்று சென்றார். அங்கு காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆய்வு மேற்கொண்ட அவர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். ஹர்சன்ப்பூரில் காங்கிரஸ் தொண்டர்களிடையே பேசிய அவர் மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் வாக்கு திருட்டு அரங்கேறிய விதம் குறித்து எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக ராகுல் காந்தி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்ற தொகுதிகளில் அடுத்த 4 மாதங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை சந்தித்திருப்பது வாக்கு திருட்டை உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். மகாரஷ்டிராவில் சுமார் 1 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக மோசடிகள் மூலம் வாக்குகள் அப்படியே பாஜகவுக்கு சென்றதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். இதேபோல் கர்நாடகாவிலும் தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் தற்போது பீகாரிலும் அரங்கேற்றப்பட்டது என்றும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். உத்தரபிரதேசம்,ஹரியானா, மத்திய பிரதேசம், குஜராத் என தேர்தல் மோசடிகள் பெரிய அளவில் நடைபெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதை அடுத்து வாக்கு திருட்டு பாஜக விலகு என்ற முழக்கம் நாடு முழுவதும் நிரூபிக்கப்பட்டு வருகிறது என்றும் அதனை காங்கிரஸ் இன்னும் வியத்தகு வழிகளில் மக்களிடம் கொண்டு செல்லும் என்றும் ராகுல்காந்தி திட்டவட்டமாக கூறினார்.