சென்னை: தொண்டர்களை பார்த்து பயம் கொள்பவர் உண்மையான தலைவர் கிடையாது. தொண்டர்களைப் பார்த்து பயம் கொள்பவர் உண்மையான தலைவர் கிடையாது என நடிகர் சத்யராஜின் மகளும், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளருமான திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: த.வெ.க. தலைவர் விஜய்யின் பாதுகாவலர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். ஒரு பழைய வீடியோவில் உங்கள் பாதுகாவலர் உங்கள் தொண்டர் ஒருவரை வேனில் இருந்து தூக்கி வீசுவதை பார்த்தேன். அந்த பையனுக்கு முதுகுத்தண்டு அல்லது தலையில் காயம் ஏற்பட்டிருந்தாலோ, அல்லது அவர் கோமா நிலைக்கு சென்றிருந்தாலோ அவரது வாழ்க்கையே தொலைந்து போயிருக்கும். தொண்டர்களைப் பார்த்து பயப்படாதீர்கள். தொண்டர்களை தூக்கி வீசாதீர்கள். தொண்டர்களைப் பார்த்து பயப்படுபவர் உண்மையான தலைவர் கிடையாது. தொண்டர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பவர்தான் உண்மையான தலைவர். மக்களை ஆள வேண்டும் என்று நினைப்பவர் உண்மையான தலைவர் கிடையாது. மக்களுக்காக பல வருடங்களாக வாழ்பவரே உண்மையான தலைவர். இவ்வாறு வீடியோவில் பேசியுள்ளார்.
+
Advertisement