பீகார் தேர்தலில் 3 தொகுதிகளில் 100க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
* போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ் தொகுதியில், ஐக்கிய ஜனதாதளம் வேட்பாளர் ராதா சரண் ஷா, ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் திபு சிங்கை விட வெறும் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
* அகியான் தொகுதியில் பாஜ வேட்பாளர் மகேஷ் பாஸ்வானிடம் வெறும் 95 வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ(எம்எல்) கட்சி வேட்பாளர் சிவபிரகாஷ் ரஞ்சன் தோல்வியடைந்தார்.
* ராம்கர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் சதீஷ் குமார் சிங் யாதவ் 30 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜவின் அசோக் குமார் சிங் தோல்வியை சந்தித்தார்.
* நபிநகர் தொகுதியில், ஜேடியுவின் சேத்தன் ஆனந்த், ஆர்ஜேடியின் அமோத் குமார் சிங்கை 112 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
* டாக்கா தொகுதியில் ஆர்ஜேடியின் பைசல் ரஹ்மான், பாஜகவின் பவன் குமார் ஜெய்ஸ்வாலை 178 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
* போர்ப்ஸ்கஞ்ச் தொகுதியில் பாஜவின் வித்யா சாகர் கேஷரி, காங்கிரஸ் வேட்பாளர் மனோஜ் பிஷ்வாஸிடம் வெறும் 221 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.


