போக்ஸ்வேகன் நிறுவனம், நடப்பு மாதத்தில் கார்களுக்கு ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. போக்ஸ்வேகன் டிகுவான் காருக்கு ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி சலுகை கிடைக்கும். இந்த கார் ரூ.49 லட்சம் ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி குறைப்பால் இதன் விலை ரூ.3.27 லட்சம் வரை குறைந்துள்ளது.
விர்டஸ் காருக்கு ரூ.1.56 லட்சம் வரை தள்ளுபடி சலுகை கிடைக்கும். டாய்குன் காருக்கு ரூ.2 லட்சம் வரை சலுகை பெறலாம். நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த சலுகை வழங்கப்படும். இதுபோல் ஹோண்டா எலவேட் காருக்கு ரூ.1.32 லட்சம் வரையிலும், ஹோண்டா சிட்டி காருக்கு ரூ.1.27 லட்சம் வரை, அமேஸ் காருக்கு ரூ.97,200 வரை தள்ளுபடி பெறலாம். நகரங்களுக்கு ஏற்ப இது மாறுபடலாம் என நிறுவனங்களின் தரப்பில் கூறப்படுகிறது.
