பெங்களூரு: பெங்களூருவில் நேற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் மறைந்த நடிகர் விஷ்ணுவர்தன் மற்றும் நடிகை பி.சரோஜாதேவி ஆகியோருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்க தீர்மானிக்கப்பட்டது. மேலும் தேசிய கவிஞர் குவெம்புவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
+
Advertisement