திருச்சி: திருச்சி மாவட்டம் அரியமங்கலம் கிருஷ்ணபவன் என்கிற தனியார் உணவகத்திற்கு சொந்தமான கார் ஒன்று மதுரை சென்று பேக்கிங் கவர், கேரி பேக் உள்ளிட்ட பொருட்கள் வாங்கிக்கொண்டு விராலிமலை வரும்போது காரிலிருந்து லேசாக புகை வந்துள்ளது.
இதையடுத்து சுதாரித்து கொண்ட ஓட்டுநர் தனியார் உணவகம் முன்பு காரை நிறுத்தி உடனடியாக இறங்கியுள்ளார். லேசாக கசிந்த புகை திடீரென பற்றி எரிய தொடங்கியுள்ளது. நிறுத்தப்பட்ட கார் திடீரென எரிய தொடங்கியதை கண்டு உணவகத்தில் இருந்த மக்கள் மற்றும் பணியாளர்கள் பதற்றமடைந்தனர்.
தீயை அணைக்க முயன்றபோது, தீ அதிகளவில் இருந்ததால் அணைக்க முடியவில்லை. தீ பற்றிய சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் எரிந்து தீக்கரையாகி எலும்புக்கூடு போல் ஆனது. இந்த சம்பவம் குறித்து விராலிமலை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.