*ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு
விராலிமலை : விராலிமலை குறுவள மைய அளவிலான கலை திருவிழா போட்டி.. ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் தனித்திறனை வெளிப்படுத்திய மாணவர்கள்..ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 3ம் வகுப்பு மாணவிகள் லோசினி, ஹர்சினி பாரதியார், நாமக்கல் கவிஞர் கவிதையை பாடி பாராட்டு பெற்றனர்.
விராலிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கலைத்திருவிழா போட்டிகள் குறுவள மையம் அளவில் ஆக,25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது இரண்டு நாட்கள் நடைபெறும் போட்டியில் 142 பள்ளிகள் பங்கேற்று மாணவர்கள் தங்கள் தனிதிறனை வெறிப்படுத்தி வருகின்றனர். வட்டார அளவில் வரும் அகடோபர் 10ம் தேதி நடைபெறுகிறது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 2022-ம் ஆண்டு முதல் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக நடப்பு கல்வியாண்டில் 1-ம் வகுப்பு தொடங்கி பிளஸ் 2 வரை அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் கலைத்திருவிழா போட்டிகள் பள்ளிகள் அளவில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இவற்றில், மாறுவேடம், பாடல், நடனம், ஓவியம், கதை கூறுதல், பேச்சு போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். முதலில், பள்ளிகள் அளவிலான போட்டி நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் குறுவள மைய போட்டிகள் ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கி நடைபெற்றது.
தொடர்ந்து வட்டாரம், மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் நாட்களில் நடைபெறும்.அந்த வகையில், விராலிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.