சாக்ஸ் விலை ரூ.8 லட்சம்!
தி கிங் ஆஃப் பாப் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட, இப்போதும் கொண்டாடப்படும் உலக இசைமேதை மைக்கேல் ஜாக்சன். நிறைய இசை ஆல்பங்களை வெளியிட்டவர் இசைக் கச்சேரிகளையும் நடத்தியுள்ளார். 1997ம் ஆண்டு பிரான்ஸில் மைக்கேல் ஜாக்சன் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். அப்போது அவர் பயன்படுத்திய சாக்ஸ் அவருடைய மேக்கப் அறையில் கிடந்தபோது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பத்திரமாக எடுத்து வைத்துள்ளனர்.அந்த சாக்ஸ் தற்போது ஏலம் விடப்பட்ட நிலையில் அவரது தீவிர ரசிகர் ஒருவர் அதனை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 8 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய கையுறை, சுமார் ரூ. 3 கோடிக்கும், அவர் அணிந்திருந்த தொப்பி, கடந்த 2023ம் ஆண்டு சுமார் ரூ. 70 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சாக்ஸ் தான் தற்போது வைரலாக இணையத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது.
வந்துவிட்டார் விநாயகர்!
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விதவிதமான வடிவில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.இதனையொட்டி, விநாயகர் சிலைகள் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி, பின்னர் வாகனங்களில் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இதற்காக நாடு முழுவதும் சிலைகள்,பொம்மை தயாரிக்கும் தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளை வடிவமைத்து வர்ணம் தீட்டிவருகின்றனர். எங்கும் விநாயகர் சிலைகள், விதவிதமான உருவாக்க வீடியோக்கள் என வைரலில் களை கட்டத் தொடங்கிவிட்டன. மேலும் இதற்கிடையில் ஹெர்பல் விநாயகர்கள், விதைகள் தாங்கிய விநாயகர்கள், சதுர்த்தி விழா அன்பளிப்புகளும் களைகட்டி வருகின்றன.