Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வைரலோ வைரல்

தீபாவளி விற்பனை!

தீபாவளிக்கு இன்னும் 20 நாட்களே இருக்கும் பட்சத்தில் எங்கும் விற்பனை கலைகட்டியிருக்கிறது. அதிலும் இணையத்தைத் திறந்தாலே அங்கே விற்பனை, இங்கே பிக் சேல், 90% வரை சலுகை என அனல் பறக்கிறது. மேலும் இம்முறை நவராத்திரி, ஆயுதபூஜா விழாக்கள், அதனுடன் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை என அனைத்தும் ஒன்றிணைந்து டபுள் விடுமுறை, மற்றும் ஷாப்பிங் என எங்கும் கூட்டம் அள்ளுகிறது. இதற்கிடையில் இந்தக் கடைக்கு வாங்க, அந்தக் கடைக்கு வாங்க என்னும் விளம்பரங்கள் வேறு நம்மை தூண்டும் பட்சத்தில் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற சமூக வலைதளவாசிகளின் அலெர்ட் வீடியோக்கள் வேறு ஒரு பக்கம் வைரலாகின்றன.

இந்தியர்கள் கடின உழைப்பாளிகள்!

ஆஸ்திரேலிய மனிதர் ஒருவர் இந்தியர்களின் குணத்தையும் , அவர்களின் கடின உழைப்பையும் பாராட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. X பக்கத்தில் Woke Eminent (@WokePandemic) என்ற கணக்கில் அவர் இந்த வீடியோவைப் பதிவு செய்திருக்கிறார். அதில் அவர், இந்தியர்கள் மற்றவர்களை விட 10 மடங்கு கடின உழைப்பாளிகள் என்றும், மிகவும் பணிவானவர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் நான் இதுவரை சந்தித்ததிலேயே மிகவும் நல்ல மனிதர்கள்’’ என்றும் கூறியுள்ளார். ‘‘ ஒரு இந்தியர் யாருக்காவது தீங்கும் செய்தார் என்ற செய்தியை நீங்கள் எப்போதும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்’’ என்றும் அவர் கூறியிருப்பது தற்போது வைரலாகியிருக்கிறது. மேலும் அவரை வெல்கம் டூ இந்தியா என இந்திய இணையவாசிகள் வரவேற்பு கொடுத்து வீடியோவைப் பகிர்ந்து வருகிறார்கள்