Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வினேஷ் போகத் இறந்துவிடுவாரோ என பயந்தேன்.. பயற்சியாளர் வோலர் அகோஸ்

வினேஷ் போகத் இறந்து விடுவாரோ என்று தாம் அஞ்சியதாக அவரது பயிற்சியாளர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிர் மல்யுத்தத்தில், 50 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்ட இந்தியாவின் வினேஷ் போகத் இறுதி சுற்றுக்குள் நுழைந்தார். அமெரிக்க வீராங்கனையுடன் அவர், இறுதி போட்டியில் மோத இருந்த நிலையில் 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியில் வினேஷ் போகத் சர்வதேச மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இருப்பினும், வினேஷ் போகத் விளையாட்டு தீர்ப்பாயத்தில் தனது தகுதி நீக்கத்தை எதிர்த்தும், வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரியும் மேல்முறையீடு செய்தார். ஆனால் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வினேஷ் போகத் இறந்து விடுவாரோ என்று தாம் அஞ்சியதாக அவரது பயிற்சியாளர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய வினேஷ் போகத்தின் பயிற்சியாளர் வோலர் அகோஸ்; அரையிறுதிப் போட்டி முடிந்ததும், வினேஷ் கூடுதலாக 2.7 கிலோ எடை இருந்தார். உடனடியாக 1 மணிநேரம் 20 நிமிடங்கள் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டார்.

ஆனால், 1.5 கிலோ கூடுதலாகவே இருந்தது. பிறகு 50 நிமிடங்கள் கடும் உடற்பயிற்சி செய்தும், அவரது உடலிலிருந்து ஒரு சொட்டு வியர்வையும் வரவில்லை. நாங்கள் அப்போது எந்த ஒரு வாய்ப்பையும் விடுவதாக இல்லை. நள்ளிரவு முதல் காலை 5.30 மணி வரை பல்வேறு உடற்பயிற்சிக் கருவிகளை அவர் மேற்கொண்டார். ஒவ்வொரு மணி நேரமும் வெறும் 2-3 நிமி இடைவெளிகள் மட்டும் எடுத்துக்கொண்டு தொடர்ந்து பயிற்சி செய்துகொண்டே இருந்தார். ஒருநிமிட இடைவெளிக்குப் பிறகு உடனே பயிற்சியை தொடங்குவார். ஒருமுறை அவரால் ஒன்றும் செய்ய இயலாமல் விழுந்துவிட்டார்.

ஆனால், மீண்டும் எழுந்து உடற்பயிற்சியைத் தொடங்கினார். ஒருமணி நேரம் கடுமையான வெப்பம் நிறைந்த தண்ணீரில் இருந்தார். அவரது கடுமையான உடற்பயிற்சிகளை பற்றி இங்கே என்னால் விரிவாக விளக்க முடியவில்லை. ஆனால், இப்போது ஒன்றுமட்டுமே எனக்கு நினைவிருக்கிறது. அவர் கடும் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது, வினேஷ் போகத் இறந்துவிடுவாரோ என்று நான் அஞ்சினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.