விழுப்புரம்: விழுப்புரம் தனியார் பள்ளியில் மயங்கி விழுந்த 11ம் வகுப்பு மாணவன் மோகன்ராஜ்(17) மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவர் உடல் பிரேத பரிசோதனை செய்யப் செய்யப்பட்டது. மாரடைப்பு ஏற்பட்டு மாணவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாரடைப்புக்கான அறிகுறி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தெரிய வரும் எனவும் மாணவனுக்கு 17 வயது என்பதால் முன்கூட்டியே அறிகுறி தெரிய வாய்ப்பில்லை எனவும் மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
+
Advertisement