விழுப்புரம்: விழுப்புரம் வீடூர் அணையில் இருந்து 9 மதகுகள் வழியாக விநாடிக்கு 4,410 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. வீடூர் அணையின் மொத்த கொள்ளளவான 32 அடியை எட்டியதால் 3 மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. வீடூர் அணையின் ஒரு மதகு வழியாக 600 கனஅடி உபரி நீர் சங்கராபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. வீடூர் அணை நீர் திறப்பு காரணமாக சங்கராபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீடுர், பெரம்பூர், சிறுவை, கணபதிப்பட்டு, ரெட்டிக்குப்பம், ஆண்டிப்பாளையம் உள்ளிட்ட 18 கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
+
Advertisement