Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விழுப்புரத்தில் பரபரப்பு போலியான ஆவணங்களை காட்டி திருச்சபை இடம் அபகரிப்பு

*விளம்பர பதாகை வைத்து கொலைமிரட்டல்

*கும்பல் மீது நடவடிக்கை கோரி எஸ்பியிடம் மனு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே ரெட்டிகுப்பத்தை சேர்ந்த குணசீலன் என்பவர் நேற்று எஸ்பியிடம் அளித்தமனுவில் கூறியிருப்பதாவது:தமிழ் சுவிஷேச லூத்தரன் திருச்சபையின்(டிஇஎல்சி) விழுப்புரம் மாவட்ட செயலாளராகவும், சொத்துமீட்பு குழுஉறுப்பினராகவும் இருந்து வருகிறேன். எங்கள் திருச்சபைக்கு சொந்தமான இடம் கிழக்குபாண்டிரோட்டில் உள்ளது.

அந்த இடத்தை நந்தனார் தெருவை சேர்ந்தவர் கடந்த ஜூலை 1ம் தேதி தங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறி போலியான ஆவணத்தை காட்டியும், போலியான சர்வே எண்களை கூறியும் எங்கள் இடத்தில் அத்துமீறி ஆக்கிரமித்து அங்கிருந்த கட்டைகளை சேதப்படுத்தி, அவரது குடும்பத்தாரும் சேர்ந்து தடுப்பு ஏற்படுத்தி தங்கள் இடம்எனகூறி விளம்பர பலகை வைத்துள்ளனர். இந்த இடம் அவர்களுக்கு சொந்தமான இடம் என்றும் யாராவது வந்தால் அவர்களை தீர்த்துகட்டுவோம் என கொலைமிரட்டல் விடுத்து சென்றனர்.

நாங்கள் இதுகுறித்து விழுப்புரம் நகர காவல்நிலையத்தில் புகார் கொடுத்தோம். விசாரணைக்கு பின் அந்த விளம்பர பதாகை எடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பாளர் தூண்டுதலின்பேரில் சிலர்வந்து எங்களிடம் தேவையில்லாமல் பிரச்னை செய்து பணம்பறிக்கும் நோக்கத்தோடு அந்த இடம் தங்களுக்கு சொந்தமான இடம் என எங்கள் திருச்சபையின் பெயரை கெடுக்கும் வகையில் அவதூறாகவும், தகாத வார்த்தைககள் பேசி மீண்டும் மீண்டும் விளம்பர பதாகை ஒட்டிச் சென்றுள்ளனர். அங்கிருந்துபோகும்போது நாங்கள் எங்கு வேண்டுமானாலும் போர்டு வைப்போம்.

எங்களை அனுசரிக்க வேண்டும். இல்ைலயென்றால் எவன்கேட்டாலும் தீர்த்துவிடுவோம் என கொலைமிரட்டல் விடுத்துசென்றுள்ளனர். போலியான ஆவணத்தை வைத்து எங்கள் இடத்தில் அத்துமீறி ஆக்கிரமித்து பணம்பறிக்கும் நோக்கத்தோடு கொலைமிரட்டல் விடுக்கும் இந்த கும்பல்மீது நடவடிக்கை எடுத்து திருச்சபை சொத்தில் பிரச்னை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.